திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா.. செயற்கையான சீனாவைக் காட்டிலும் சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவில் எனது இறுதிமூச்சு இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவுக்கு திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய்லாமா வந்திருந்தார். அமெரிக்காவின் அமைதி என்ற கல்வி நிறுவனம் (யு.எஸ்.ஐ.பி.) கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் பங்கேற்ற அவர் கூறுகையில், ’’ இந்தியா சுதந்திரமான ஜனநாயக நாடு. அதில் அன்பான மக்கள் சூழ்ந்துள்ளனர். செயற்கைத்தன்மை கொண்ட சீனாவில் சாவதை விட அன்பான மக்கள் சூழ்ந்த இந்தியாவில் நான் எனது இறுதிமூச்சை நிறுத்த நினைக்கின்றேன். ’’ என்றார்.
’’ நான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் கூறினேன் நான் இன்னும் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு உயிருடன் இருப்பேன் என்று அதில் எந்த கேள்வியும் இல்லை. நான் சாகும் போது .. இந்தியாவில் சாக வேண்டும்.. அன்பு காட்டும் மக்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் சாக விரும்புகின்றேன். செயற்கையான இடத்தில் அல்ல. நான் சீனாவில் அந்த அலுவலர்கள்மத்தியில் இறந்தால் அது செயற்கையாக இருக்கும். சுதந்திர இந்தியாவிலேயே சாக எனக்கு விருப்பம்.என்னை சுற்றி நம்பிக்கையான நட்பு வட்டாரம் இருக்க வேண்டும்.அவர்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் ’’ என தெரிவித்தார்.
தலாய்லாமா ஆன்மீக போதனைகள் மூலம் உலகம் முழுவதும் போற்றக்கூடிய ஒருவர். தனது சாமர்த்தியத்தால் அரசியல் தலைவர்கள் உள்பட பலரையும் அவர் கவர்ந்தார். ஆனால் சீன அதிகாரிகள் இவரை சந்தேக நோக்கத்தோடுதான் பார்ப்பதாக அவர் ஏற்கனவே பல இடங்களில் தெரிவித்திருந்தார். திபெத் சீனா சட்ட விரோத ஆக்கிரமிப்பின் போது இவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். பின்னர் திபெத் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க சீனாவுடன் நடுநிலைப் பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்தார்.