fbpx

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. இந்த விதியை மீறினால் ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும்..

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் உயிரிழந்தது, நாட்டில் போக்குவரத்து விதிகள் குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது. கார்களில் பின் இருக்கையிலும் சீட் பெல்ட் போடுவதை அரசு இப்போது கட்டாயமாக்கப் போகிறது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150,000 பேர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர் என்று சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது..நான்கு நிமிடங்களுக்கு ஒருவர் விபத்தில் இறக்கிறார் என்று கூறப்படுகிறது..

இரு சக்கர வாகனங்களின் பாதுகாப்பிற்காக நாடு பல விதிகளை வகுத்துள்ளது.ஆனால், பெரும்பாலான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை புரிந்துகொண்டும் அதை பின்பற்றாமல் இருக்கின்றனர்.. அதன்படி, ஹவாய் செருப்பு அணிந்து பைக் ஓட்ட கூடாது.. இந்த விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படும்..

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், ஹவாய் செருப்புகளுடன் பைக் ஓட்டுவது குற்றமாகும். இந்த செருப்பு, பிடியை வலுவிழக்கச் செய்து, பாதங்கள் வழுக்கும். மேலும், இந்த வகை காலணிகள் மோட்டார் சைக்கிளில் கியர் மாற்றும் போது கால் சறுக்கி விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்ட நிலையில் ரூ. 2000 வரை பைக் உரிமையாளரின் சலானில் இருந்து கழிக்க முடியும்.

மேலும், பைக் ஓட்டும் போது ஓட்டுநர்கள் சரியான ஆடைக் குறியீட்டை மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். உதாரணமாக, பைக் ஓட்டும்போது, ​​உடலை முழுமையாக மூடும் வகையில் பேண்ட், சட்டை அல்லது டி-சர்ட் அணிய வேண்டும். விபத்து ஏற்படும் போது இந்த ஆடைகள் உடலை ஓரளவு பாதுகாக்கும். இந்த விதியை மீறும் பட்சத்தில் ரூ.2000 வரைஅபராதம் விதிக்கப்படும்.. எனவே பைக் ஓட்டும் போது இந்த விதியைப் பின்பற்றவும்.

Maha

Next Post

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞர்; போக்சோவில் கைது… டி.என். பாளையத்தில் பரபரப்பு..!!

Fri Sep 23 , 2022
டி.என்.பாளையம் அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டாா். ஈரோடு டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் பகுதியில் வசித்து வருபவர் கருப்பன். இவருடைய மகன் இளங்கோவன் (22). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை இளங்கோவன் காதலித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை பேசி சிறுமியை கடத்தி சென்று இளங்கோவன் திருமணம் […]

You May Like