fbpx

அமெரிக்கா விமானம் தாங்கி போர்க்கப்பல் தென்கொரிய வருகைக்கு எதிரொலி; வடகொரியா ஏவுகணை சோதனை..!!

அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும், கண்டம் விட்டு கண்டம் பாயும், ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அடிக்கடி அதிர்ச்சி தரும் நாடு வடகொரியா. குறிப்பாக, அதன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இதனிடையே, அணு ஆயுத வல்லமை பொருந்திய அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் நேற்று முன் தினம் தென் கொரியாவுக்கு வந்தடைந்தது. ராணுவ பயிற்சிக்காக அமெரிக்க போர் கப்பல் தென் கொரியா வந்துள்ளது. இந்நிலையில், தென் கொரியாவிற்கு அமெரிக்க போர் கப்பல் வருகைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா நேற்று ஏவுகணை சோதனை நடத்தியது.

குறுகிய தொலைவு இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையை ஏவி வடகொரியா சோதனை நடத்தியுள்ளது. இந்த தகவலை தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய சம்பவத்தால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Rupa

Next Post

விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டு வீச்சா? எச்சரிக்கும் காவல்துறை..!!

Sun Sep 25 , 2022
விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார். கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் வீடுகள் உள்ளிட்ட  பல பகுதிகளிலும் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த சூழ்நிலையில், சம்பவங்கள் நடைபெற்ற இடங்களை நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு […]
விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டு வீச்சா? எச்சரிக்கும் காவல்துறை..!!

You May Like