அறநிலையத்துறை அமைச்சரின் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. அவரின் உடன் பிறந்த அண்ணன் அண்ணன் பி.கே.தேவராஜ். இவர் சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அமைச்சர் சேகபாபுவின் அண்ணன் தேவராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தேவராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேவராஜ் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என போலீசார் தீவிரமாகவே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.