fbpx

அடி தூள்..; மக்களே இனி உறுதி மொழி பத்திரம் கொடுத்தா நகை கடன் தள்ளுபடி…! அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!

திமுக தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றாக தமிழகத்தில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது தான்… அரசு எப்பொழுது நிறைவேற்றும் என்கின்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில், தற்பொழுது அதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன் படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர்கள் நகை கடன், விவசாய கடன் குறித்து எழுதிய கேள்விக்கு பதில் அளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ; தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதில் சுமார் 1 லட்சம் பேர் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் வைத்து தற்போது வரை நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்காததால் அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. அவர்கள் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் தள்ளுபடி செய்யப்படும் என கூறியுள்ளார்.

Vignesh

Next Post

இந்த உணவுகளால் ஞாபக மறதி ஏற்படுமாம் தெரியுமா?

Tue Sep 27 , 2022
உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. நாம் சாப்பிடும் உணவுகளின் மீது நாம் கவனம் செலுத்துவது நல்லது. பொதுவாக, குப்பை உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நம் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நரம்பியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, சிப்ஸ், நம்கீன்ஸ், குளிர்பானங்கள் மற்றும் குக்கீகள் போன்ற அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது நம் மனதில் பயங்கரமான விளைவை ஏற்படுத்துகிறது. இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் […]

You May Like