வடிவேலு மற்றும் விவேக் போன்ற காமெடி நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் தன்னுடைய காமெடி நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் போண்டாமணி. இலங்கை தமிழரான போண்டா மணிக்கு தற்போது உடல்நலக்குறைவால் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளது. இதை தொடர்ந்து மருத்துவ செலவிற்கு பணமில்லாமல் தவித்த போண்டாமணிக்கு தனுஷ், விஜய் சேதுபதி, போன்றோர் ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்துள்ளனர்.
சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்த பிரபல காமெடி நடிகர் வடிவேலுவிடம் போண்டா மணி நிலைமை பற்றி கேள்வி எழுப்பிய நிருபர்களிடம், தன்னால் முடிந்த உதவியை போண்டா மணிக்கு செய்வதாக வடிவேலு கூறினார். ஆனால் தற்போது வரை வடிவேலு தனக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்றும், அவர் உதவி செய்வதாக சொன்ன போதே தன்னுடைய உடல்நிலை பாதி குணமடைந்து விட்டது என்று நெகிழ்ச்சியுடனும் பெருந்தன்மையுடனும் போண்டாமணி கூறியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன் நடிகர் சிங்கமுத்து வடிவேலு பற்றி பேசுகையில் அவர் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார் என்று கூறியுள்ளார். போண்டாமணி விஷயத்திலும் அது தான் நடந்துள்ளது என ரசிகர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.