இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி இன்று தொடங்குகிறது.
இந்திய அணியில் முக்கியமான வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. டி 20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக காயம் ஏற்பட்டு விட கூடாது என்று சில வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. தென்னாபிரிக்க அணி டி 20 தொடர்களில் அவ்வளவு வலிமையாக இல்லை. இருந்தாலும் தெம்பா பவுமா கேப்டன்சிக்கு கீழ் அந்த அணி சிறப்பாக ஆடி வருகிறது. அவரும் 3 மாத ஓய்வுக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். இதனால், இந்த தொடரை வெற்றியுடன் தொடங்குவதற்கு அந்த அணி தீவிரமாக முயலும்.
இந்திய அணியில் இந்த முறையும் ஜடேஜா இடம்பெறவில்லை. காயம் காரணமாக அவர் அணியில் இடம்பெறவில்லை. அதேபோல் ஹர்திக் பாண்டியா கடைசி நேரத்தில் அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு காயம் எதுவும் இல்லை. ஆனால், ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பில் இருந்தே அவர் ஓய்வின்றி விளையாடி வருகிறார். அடுத்து டி20 உலகக் கோப்பை உள்ளது. இதற்கு முன் அவருக்கு ஓய்வு தேவை. இதனால் அவர் இன்று ஆடவில்லை. இதையடுத்து, அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதேபோல் ஆசியக் கோப்பை தொடரில் புவனேஷ்வர் குமார் சரியாக பவுலிங் செய்யவில்லை. மேலும் கடந்த ஆஸ்திரேலிய தொடரிலும் அவர் சரியாக பவுலிங் செய்யவில்லை. இதனால், அவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு இவர் கூடுதல் பயிற்சிகளை பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட உள்ளார். மற்றொரு பக்கம் ஷமி இந்திய அணியில் கொரோனா காரணமாக இடம்பெறவில்லை.
அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இருந்தாலும் அவருக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கிடைப்பது சிரமம். இதனால், ஸ்டான்ட் பை வீரராக உம்ரான் மாலிக் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இன்னும் உம்ரான் மாலிக் இடம்பெறவில்லை. ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், கே.எல். ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், தினேஷ் கார்த்திக், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, தீபக் ஹூடா ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்று உள்ளனர்.
இன்று இந்திய அணியில் அர்ஷிதீப் சிங் இடம்பெற வாய்ப்பு உள்ளது. இளம் வீரரான அவர் டெத் ஓவர்களில் நன்றாக பவுலிங் செய்வார். புவனேஷ்வர் குமாருடன் இணைந்து நன்றாக அவர் பவுலிங் செய்யும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், இந்திய அணியின் டெத் பவுலிங் சிறப்பாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. இன்று ஆடும் இந்திய அணியில், ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஆடும் வாய்ப்புகள் உள்ளன.