பீகாரில் காதலனுடன் வீட்டை விட்டு ஓடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!! 2 1/2 மணி நேரத்திற்கு ஒரு ஜோடி ஓட்டம்..!!

பீகாரில், கடந்த சில மாதங்களாக தங்கள் பெண் பிள்ளைகள் காணாமல் போனதாக அல்லது கடத்தப்பட்டதாக புகார் அளிக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. ஆனால் காவல்துறையினர் விசாரணையில் சிறுமிகள் கடத்தப்படவில்லை என்றும், அவர்களாகவே விருப்பபட்டு காதலனுடன் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. காவல்துறையினரின் அறிக்கையின் படி, கடந்த 6 மாதங்களில், பீகாரில் இதுபோல 1870 சிறுமிகள் காதலனுடன் ஓடிப்போனதாக வழக்குகள் பதிவாகியுள்ளன.


இதில் ஜனவரி மாதத்தில் 240 வழக்குகளும், பிப்ரவரியில் 247 வழக்குகளும், மார்ச்சில் 297 வழக்குகளும், ஏப்ரலில் 330 வழக்குகளும், மே மாதத்தில் 383 வழக்குகளும், ஜூன் மாதத்தில் 373 வழக்குகளும் பதிவாகியுள்ளன. மேலும் இந்த எண்ணிக்கை தினசரி அடிப்படையில் பார்த்தால், பீகாரில் ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்திற்கும் ஒரு காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடியுள்ளனர். அதே சமயத்தில், இந்த வருடம், 2022 இல் இதுவரை 2778 இளம்பெண் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் படி, இந்த வழக்கில் பீகார் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 2020-ல் 5308 சம்பவங்கள் நடந்த நிலையில், 2021-ல் 6589 வழக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது, காதலனுடன் ஓடிப்போய்விட்டதாக காதலி முன் வந்து வெளிப்படையாக கூறுகின்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

பீகாரில் கடந்த 2015-ஆம் வருடம் காதல் மற்றும் கல்யாணம் போன்ற நோக்கத்தில் கடத்தப்பட்டதாக 4229 வழக்குகள் பதிவாகி உள்ளன. 2016-ல், இந்த வழக்குகள் 4652 ஆக அதிகரித்துள்ளது. 2017 -ஆம் வருடத்தில், கடத்தல் வழக்குகள் அதிகரித்து 6217 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 2017- ஆம் வருடத்தை விட 2018 -ஆம் வருடத்தில் 2000 வழக்குகள் அதிகரித்து சுமார் 8 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

1newsnationuser5

Next Post

இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும்.. இந்த மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க..

Wed Sep 28 , 2022
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, தஞ்சாவூர், […]
தமிழக மக்களே எச்சரிக்கை..!! நவ.11, 12இல் அதிகனமழை பெய்யும்...!! மாவட்டங்களின் விவரங்கள் இதோ..!!

You May Like