fbpx

விழாக்கோலம் பூண்டது மைசூரு … தசரா பண்டிகையை முன்னிட்டு மின்விளக்கு ஒளியில் ஜொலிக்கின்றது…

மைசூரு தசரா விழாவை முன்னிட்டு நகரமே மின்விளக்கு ஒளியில் தக தகவென ஜொலிக்கின்ற அழகான காட்சிகளைக் காண ஆயிரம் கண் தேவைப்படும்.

மைசூரு தசரா விழா கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகள் அந்த அளவிற்கு சிறப்பாக கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கடந்த 2 நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார்.  இதையடுத்து 10 நாட்களுக்கு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெறும். விழாவிற்காக நகரம் முழுவதும் மின் விளக்கு அலங்காரங்கள் நம் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதற்காக மாலை 4 மணி முதல் 11 மணி வரை மைசூரு அரண்மனை பகுதி , கேஆர் சர்க்கில் , ஆயுர்வேதா மருத்துவமனை சர்க்கிள் , சாம்ராஜா டபுள் ரோடு, அக்ரஹாரா சர்க்கிள், தியாகராஜா ரோடு போன்ற பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. நகர் முழுக்க 126 கிலோ மீட்டருக்கு மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் பாரம்பரியம் பின்பற்றப்படுகின்றது.

mysore dusserah decoration

அம்பாரி பயணம் : மின்விளக்கு அலங்காரத்தைக் காண அரண்மனை மற்றும் சுற்றியுள்ள நகர்ப்பகுதிகளைப் பார்வையிட பொதுமக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தனியார் வாகனங்களுக்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் அனுமதி கிடையாது எனவே அம்பாரி பேருந்துகளில் பொதுமக்கள் வலம் வரும் வகையில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அம்பாரி பேருந்தின் மேல்பகுதியில் கூரையில்லாத வெட்ட வெளி வானத்தை காணும் வகையில் , நகரின் அழகை ரசித்துக் கொண்டே சுற்றிப் பார்க்கும் வகையில் பிரத்யேக டபுள் டக்கர் பேருந்து விடப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் அம்பாரியில் நகரை வலம் வருகின்றனர்.

இருப்பினும் அம்பாரியில் பயணிக்க ரூ.350 கட்டணம் என்பது சற்று கூடுதலாக உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். https://www.kstdc.co/ இந்த இணையதளத்தில் நாம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மின்விளக்கு ஒளியில் அரண்மனை : பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் மைசூரு அரண்மனை மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றது. செப்டம்பர் 26 முதல் இரவு 7 மணி முதல் 11 மணி வரை தினமும் மின் விளக்கில் அரண்மனை ஜொலிக்கும் . இதனால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அரண்மனை முன்பு புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

Next Post

விவசாய தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயிகள்; ஈரோட்டில் போலீசார் அதிரடி சோதனை..!!

Wed Sep 28 , 2022
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஓசூரில் அமைந்துள்ள மலை கிராமத்தில் வசிப்பவர் மாதேவன் (37). இவர் ஒரு விவசாயி. மகாதேவன் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக பர்கூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மகாதேவன் தோட்டத்திற்கு இன்று காலை காவல்துறையினர் சென்று சோதனை செய்தனர். அப்போது 7 அடி உயரத்தில் வளர்ந்திருந்த 6 கஞ்சா செடிகளை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து, கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த […]

You May Like