fbpx

ஷாக் நியூஸ்.. ஒரே நாளில் ரூ.440 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ரூ.37,440-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது… சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.4,680-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து, ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.50 அதிகரித்து ரூ.61.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.61,500-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

எஸ்பிஐ வங்கியில் 1673 காலியிடங்கள்.. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது..? முழு விவரம் உள்ளே..

Thu Sep 29 , 2022
எஸ்பிஐ வங்கி பி.ஒ அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் காலியாக ப்ரோபேஷனரி ஆபிசர் (Probationary Officer) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இந்த பணிகளுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த வாரம் தொடங்கியது.. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 12 ஆகும். இதன் மூலம் 1673 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.. காலியிட விவரங்கள் : […]

You May Like