fbpx

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி தர முடியாது..!! தமிழக அரசு அறிவிப்பு..!!

சட்டம்-ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி அக்டோப்ர 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கோரியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றமும் அதற்கு அனுமதி வழங்கியிருந்தது. முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய முடியும் எனவும், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது எனவும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி தர முடியாது..!! தமிழக அரசு அறிவிப்பு..!!

இந்த சூழ்நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, அணி வகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மனு எண்ணிடப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து தனியாக வழக்கு தொடரலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. சட்டம் – ஒழுங்கை காரணம் காட்டி இந்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும் வகையில், அரசு உத்தரவிட்டுள்ளது என்று ஆர்எஸ்எஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Chella

Next Post

’பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்’..!! காவல்நிலையத்திற்கு வந்த கடிதத்தால் பரபரப்பு..!!

Thu Sep 29 , 2022
பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்க மர்ம நபர்கள் முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 6 பேரை மேற்கு […]
’எனக்கு போட்டி நீயா’..? ஆத்திரத்தில் உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய திமுக கவுன்சிலர்..!!

You May Like