fbpx

மசாஜ் சென்டரில் வேலை..! சோர்வுடன் வீடு திரும்பும் இளம்பெண்..! நோட்டமிட்ட கணவர்..! காத்திருந்த அதிர்ச்சி

இரவு வேலை எனக் கூறிவிட்டு பணிக்கு செல்லும் மனைவி, சந்தேகத்திற்கு இடமான சோர்வுடன் வீட்டிற்கு வருவதால் சந்தேகமடைந்த கணவர் கண்காணித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டம் கே.ஜி. சாவடியில் 30 வயதான பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் இரயில்வே ஊழியராக பணியாற்றுகிறார். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், இந்த பெண் தனது கணவரிடம் ’நான் வேலைக்கு செல்கிறேன்’ என்று கூறியுள்ளார். கணவரும் அதற்கு அனுமதித்துள்ளார். தினமும் இரவு நேர பணி என்று புறப்படும் இளம்பெண், நள்ளிரவு நேரத்தில் அசதியுடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். மேலும், நாட்கள் செல்லச்செல்ல அவரின் நடவடிக்கையும் மாறி குழந்தைகளை கவனிக்காமல் இருந்துள்ளார். இதனால் மனைவி என்ன வேலைக்கு செல்கிறார் என கணவர் கண்காணிக்க திட்டமிட்டுள்ளார். 

மசாஜ் சென்டரில் வேலை..! சோர்வுடன் வீடு திரும்பும் இளம்பெண்..! நோட்டமிட்ட கணவர்..! காத்திருந்த அதிர்ச்சி

சம்பவத்தன்று மனைவி வேலைக்கு புறப்பட்டு சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்ற கணவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இரவு நேரத்தில் பணி என்று புறப்பட்டுச் சென்ற மனைவி மசாஜ் சென்டரில் வேலை பார்ப்பது கணவருக்கு தெரியவந்தது. அவர் மசாஜ் சென்டருக்கு வாடிக்கையாளராக வரும் நபரோடு வெளியே சென்றுள்ளார். அங்கு தனிமையான இடத்தில் இருவரும் உல்லாசமாக இருக்க, பின்னர் நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். தனது மனைவியின் வேலையை அறிந்த கணவர் மனைவியிடம் வீட்டில் வைத்து கேட்கையில் பல ஆண்களுடன் அவர் கள்ளக்காதல் வைத்திருப்பதும் தெரியவந்தது.

மசாஜ் சென்டரில் வேலை..! சோர்வுடன் வீடு திரும்பும் இளம்பெண்..! நோட்டமிட்ட கணவர்..! காத்திருந்த அதிர்ச்சி

கணவருக்கு உண்மை தெரிந்துவிட்டது என நினைத்த பெண், மறுநாள் வேலைக்கு செல்வதாக குழந்தைகளிடம் கூறிவிட்டு மாயமாகி இருக்கிறார். இதனால், மனைவியை கண்டுபிடித்துத் தரக்கோரி அந்த பெண்ணின் கணவர் கே.ஜி. சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

’காதலியுடன் டேட்டிங் செல்ல பணம் கேட்ட ட்விட்டர் பயனாளி..!! ரூ.500 அனுப்பிய அமித் மிஸ்ரா..!

Fri Sep 30 , 2022
ட்விட்டர் பதிவின் கமெண்டில் காதலியுடன் டேட்டிங் செல்ல ரூ.300 கேட்ட இளைஞருக்கு கூகுள் பே மூலமாக ரூ.500 அனுப்பினார் அமித் மிஸ்ரா. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில் சுரேஷ் ரெய்னா டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த பதிவின் கமெண்டில் ஒரு நபர் தனது காதலியுடன் டேட்டிங் செல்ல ரூ.300 தேவைப்படுவதாகவும், பணம் கொடுத்து உதவுமாறும் கேட்டிருந்தார். […]
’காதலியுடன் டேட்டிங் செல்ல பணம் கேட்ட ட்விட்டர் பயனாளி..!! ரூ.500 அனுப்பிய அமித் மிஸ்ரா..!

You May Like