fbpx

இந்திய நிறுவனத்திற்கு; ஈரானிலிருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்க… அமெரிக்கா தடை விதித்துள்ளது..!!

பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை ஈரானில் இருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை விதித்து இருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்க கருவூலத் துறை வெளியிட்டுள்ள தகவலில், இந்திய நிறுவனம் உள்பட சர்வதே அளவிலான பன்னாட்டு நிறுவனங்கள், ஈரானிய நிறுவனமான டிரைலையன்ஸ் மூலம் மில்லியன் டாலர் மதிப்புள்ள மெத்தனால் மற்றும் எண்ணெய் போன்ற பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை வாங்கி உள்ளது என்று தெரிவித்திருக்கிறது.

இதை தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், திபால்ஜி பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதனுடன் சேர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஹாங்காங்கில் இருக்கும் சில நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. 2019-ல் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

Rupa

Next Post

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் யாருக்கு அதிகம் வாய்ப்பு ?

Sat Oct 1 , 2022
காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் . இதுவரை திக் விஜஸ் சிங், சசிதரூர் , மல்லிகார்ஜுன கார்கே, கெல்லட் ஆகியோர் தலைவராக மனுத்தாக்கல் செய்திருந்தனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெல்லட் தேர்தல் போட்டியில் இருந்து […]

You May Like