‘வந்தாச்சு புதிய நம்பர் பிளேட்’..!! இனி வாகனங்களில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்..!!

நாடு முழுவதும் எந்தவித தடையுமின்றி சொந்த வாகனத்தில் பயணம் செய்ய வசதியாக புதிய ’பாரத் சீரிஸ் நம்பர் பிளேட்’ நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. 


இந்தியாவில் புதிய நம்பர் பிளேட் ஒன்று மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. BH அல்லது பாரத் சீரிஸ் என்று அழைக்கப்படும் இந்த நம்பர் பிளேட்டுகள் மத்திய போக்குவரத்து அமைச்சகம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் எந்தவித தடையுமின்றி சொந்த வாகனத்தில் பயணம் செய்ய வசதியாக புதிய பாரத் சீரிஸ் நம்பர் பிளேட் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த நம்பர் பிளேட்டை அறிமுகம் செய்ய முக்கிய காரணம் வேறு மாநிலங்களுக்கு நாம் குடிபெயர்ந்தால் அந்த மாநில வாகன பதிவு எண்ணுக்கு மாற்ற வேண்டிய சிரமம் ஏற்படாது.

வந்தாச்சு புதிய நம்பர் பிளேட்..!! இனி வாகனங்களில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்..!!

உதாரணமாக நாம் நம்முடைய TN என்று பதிவு செய்த வாகனத்தை வேறு மாநிலங்களில் 12 மாதங்கள் மட்டுமே ஓட்ட முடியும். அதன் பிறகு நாம் அங்கு இருந்தால் அந்த மாநில பதிவு எண்ணுக்கு வாகனத்தை மீண்டும் மாற்ற வேண்டும். தற்போது இந்த BH காணப்படும் பாரத் சீரிஸ் கார்டை வைத்திருந்தால் நாம் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். சுற்றுலா வாகனங்கள் எந்தவொரு சோதனை சாவடிகளிலும் நிறுத்தப்படமாட்டாது. இந்த புதிய நடைமுறையின் கீழ் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், வாகனங்களுக்கான 30,000 பர்மிட்டுகள் மற்றும் 2.75 லட்சம் அங்கீகாரங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. 

இந்த செய்தியையும் படிக்க: ’9 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் பெண்’..!! கூகுள் மேப்பில் சிக்கியது எப்படி..?

CHELLA

Next Post

காலாண்டு விடுமுறையில் குழப்பம்..!! பள்ளிகள் மீண்டும் திறப்பு..!! புதிய அறிவிப்பு வெளியீடு..!!

Thu Oct 6 , 2022
தமிழக பள்ளிகளில் காலாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறப்பது குறித்த புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் செப்டம்பர் மாதத்தில் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் செப்.30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும், தேர்வுகள் முடிந்து கண்டிப்பாக காலாண்டு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும் சிறப்பு வகுப்புகளை அனுமதி இன்றி நடத்தக்கூடாது என்றும் தெரிவித்திருந்தது. அக்டோபர் […]
1007548 school covid outbreak

You May Like