பெங்களூரு டுவிட்டர்வாசிகள் மத்தியில் கல்லூரிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு டீ கடை நடத்துவது டிரெண்ட் ஆகி வருகின்றது.
பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் ஐ.டி., போன்ற துறைகளில்தான் இளைஞர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீப காலமாக வேலை இழப்பு போன்ற பல்வேறு காரணங்களால் இளைஞர்கள் டீ கடை தொடங்குவதை ட்ரெண்டாக மாற்றியுள்ளனர். அந்த வகையில் பெங்களூருவில் இளைஞர் ஒருவர் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு டீ கடை தொடங்கி உள்ளான்.
பல கடைகளில் நாம் போன் பே, கூகுள் பே வசதி இருப்பதை பார்த்திருப்போம் இந்த இளைஞர் பின்காயினை ஏற்பதாக அறிவித்து விளம்பரப் பலகை வைத்துள்ளார். பெங்களூரு டெக் மற்றும் கிரிப்டோ முதலிட்டாளர்கள் மத்தியில் அதிக அளவிலான கவனத்தை ஈர்த்து வருகின்றார் இந்த இளைஞர்.
இவரது பெயர் சுபம் சைனி .. கல்லூரி படிக்கும்போதே கிரிப்டோவில் முதலீடு செய்து அதிக அளவு லாபம் ஈட்டியுள்ளார். 2021 ஏப்ரலில்இந்த நிலை மாறியது மேலும் கிரிப்டோ சந்தை சரிய தொடங்கியது. சுபம் சைனியின் நிதி நிலை மோசமடைந்ததால் சாலை ஓரத்தில் கிரிப்டோ பேமண்ட் ஐ ஏற்கும் டீ கடையை திறந்துள்ளார். தனது பிளாஸ்டிக் மற்றும் மறு சுழற்சி செய்ய முடியாத பொருட்களை பயன்படுத்துவதை அவர் குறைத்துள்ளார். இதனால் டீ விற்பனை சூடு பிடித்துள்ளது. வாரத்திற்கு 20பேராவது கிரிப்டோ பணத்தை செலுத்துகின்றனர்.