fbpx

வாரிசு படத்தில் இடம்பெறும் ’ஆல்தோட்ட பூபதி’ பாடல்..!! அன்று சிம்ரன்… இன்று யார் தெரியுமா..?

’வாரிசு’ திரைப்படத்தில் விஜயின் ’ஆல்தோட்ட பூபதி’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர், தற்போது வம்சி இயக்கி வரும், வாரிசு திரைப்படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இதில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சரத்குமார், பிரபு, குஷ்பூ, ஷாம், சங்கீதா, ஸ்ரீகாந்த் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

வாரிசு படத்தில் இடம்பெறும் ’ஆல்தோட்ட பூபதி’ பாடல்..!! அன்று சிம்ரன்... இன்று யார் தெரியுமா..?

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இப்படத்தில், விஜய் நடிப்பில் 2002ஆம் வெளியான யூத் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள “ஆல்தோட்ட பூபதி” என்ற பிரபல பாடலை வாரிசு திரைப்படத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணி ஷர்மா இசையமைத்திருந்த இப்பாடலை இசையமைப்பாளர் தமன் ரீமேக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்பாடல் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடலாக வெளியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க… ’இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்ட நடிகர்..!! அதிர்ச்சியில் படக்குழு..!!

Chella

Next Post

பா.ஜ.க. மாநிலத் தலைவராகப் போகின்றாரா குஷ்பூ?

Thu Oct 6 , 2022
காங்கிரஸ் , திமுக கட்சிகளில் இருந்து வெளியேறி பா.ஜ.கவில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு மாநில தலைவர் பொறுப்பு கொடுக்க உள்ளதாக பெயர் அடிபட்டு வருகின்றது. நடிப்பால் ஈர்த்த நடிகை குஷ்பூ சமீபத்தில் ரஜினியுடன் அண்ணாத்தே திரைப்படத்தில் நடித்தார். முன்னதாக அவர் அரசியல் பிரவேசத்தில் ஆர்வம் காட்டி வந்தார். முதலில் திமுகவில் இணைந்த அவருக்கு கலைஞரிடம் நல்ல அங்கீகாரம் இருந்தது. பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதில்இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். […]

You May Like