1 மில்லியன் பயனர்களின் கடவுச்சொல் கசிந்ததாக பேஸ்புக் நிறுவனமான மெட்டா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில், உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் பேஸ்புக் செயலி மிகவும் பிரபலமானது. தங்களின் தரவு பாதுகாப்பானது மற்றும் யாரும் அவர்களை அச்சுறுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நம்பிக்கை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை, பேஸ்புக் நிறுவனமான மெட்டா, 1 மில்லியன் பயனர்களின் கடவுச்சொல் கசிந்ததாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மூலம் பயனர்களின் இந்தத் தரவு கசிந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை, டேட்டாவை திருடுவதற்காக ஆப்பிள் அல்லது ஆண்ட்ராய்டுக்காக வடிவமைக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களை மெட்டா அடையாளம் கண்டுள்ளது.
இந்த ஆப்ஸ், கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் பட்டியலிடப்பட்டு, போட்டோ எடிட்டர், கேம், விபிஎன் சேவை போன்ற பயன்பாடுகளாக காட்டப்படுகின்றன. அம்சங்களைப் பயன்படுத்துவதற்கு ஈடாக பயனர்களின் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களைத் திருடுவதற்கு அடிக்கடி பேஸ்புக் கணக்குகளில் உள்நுழையச் செய்து, அதன் பிறகு அவர்கள் பேஸ்புக்கில் இருந்து தரவு மற்றும் கடவுச்சொற்களைத் திருடுகின்றனர். ஏற்கனவே மில்லியன் கணக்கான பேஸ்புக் பயனர்களின் தரவு கசிவு வழக்கில், பேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது.
கசிந்த பெரும்பாலான நிகழ்வுகளில், ஹேக்கர்கள் சந்தையின் வசதிக்கு ஏற்ப தரவுகளை வெவ்வேறு பகுதிகளாகப் பிரிப்பதைக் காணலாம். அதாவது திருடப்பட்ட தரவு நகரங்கள், வயது, பாலினம் மற்றும் செலவழிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள், நிறுவனங்கள் அல்லது அரசியல் கட்சிகளுக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.