உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் யாதவ் ஆகஸ்ட் 22ம் தேதி மருத்துவமனைக்கு வழக்கமான சோதனைக்காக சென்றார்.அ ப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உத்தரபிரதேசத்தின் பிரபல மருத்துவமனையான வேதாந்தா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் தனிக்கவனம் செலுத்தி அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
தற்போது 82 வயதாகும் முலாயம்சிங் யாதவ் உடல்நிலை மோசமான நிலையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் வேதாந்த மருத்துவமனை மருத்துவ இயக்குனர் சஞ்சீவ் குப்தா தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் , முலாயம் சிங் யாதவை சந்தித்தார். பின்னர் ஹரியான மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் உடல் நிலையை பற்றி நேரில் சந்தித்து கேட்டறிந்தனர்.
அப்போது விரைவில் குணமடைந்துவிடுவார் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். அவரது மகன் அகிலேஷ் யாதவும் அவ்வாறே கூறினார். இதனால் விரைவில் வீடு திரும்புவார் என நம்பப்பட்டது. தற்போது அவரது உடல் நிலை மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மருத்துவமனை வளாகத்தில் தொண்டர்கள் குவிய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் தொண்டர்கள் சிலர் குவிந்துள்ளனர். முன்னதாக பிரதமர்நரேந்திர மோடி அகிலேஷிடம் தொலைபேசியில் பேசியபோது முலாயம் சிங் யாதவ் உடல் நலம் பற்றி விசாரித்ததாக தெரிவிக்கப்பட்டது..
உத்தரபிரதேசத்தின் முக்கியமான நபரான முலாயம்சிங் யாதவ் மூன்று முறை பணியாற்றினார். மற்றும் மத்திய அரசில் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.