fbpx

பெண்களே இனி கவலைப்படாதீங்க..!! இந்த உணவுகள் மூலம் மார்பக புற்றுநோயை சரி செய்யலாம்..!! ஆய்வு முடிவில் வெளியான தகவல்..!!

பெண்களுக்கு வரக்கூடிய பெரும்பான்மையான நோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று. ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமென்றாலும் பெண்கள்தான் இந்த புற்றுநோயால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சீரற்ற வாழ்க்கைமுறை, உடற்பருமன் மற்றும் வளர்சிதைமாற்ற பிரச்சனைகளால் மார்பக புற்றுநோய் உருவாகிறது. இருப்பினும், n-3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது இது கொடிய நோயை வெல்ல உதவும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

வட அமெரிக்க மெனோபாஸ் சொசைட்டியின் இதழான மெனோபாஸில் இதுகுறித்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. n-3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களான ஒமேகா-3 மற்றும் ஒமேகா 6 மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவற்றுக்கு இடையான தொடர்பைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் 1600 பேரை இந்த ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். ஆய்வின் முடிவில், மீன் போன்ற கடல் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துகள் புற்றுநோய் பாதிப்பின் ஆபத்துகளை குறைந்த அளவில் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், டயட் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டுவருவது மூன்றில் ஒருவரை ஆபத்திலிருந்து காப்பதாக கூறுகிறது. அதிக நார்ச்சத்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமும் அதிக பால் பொருட்களை தவிர்ப்பதன் மூலமும் கேன்சர் கட்டிகள் வராமல் தடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒமேகா 3 கொழுப்புகளானது உடலுக்கு அநேக நன்மைகளை வழங்குவதுடன், வளர்சிதை மாற்ற குறைபாடுகள், இதய நோய்கள் மற்றும் நீரிழிவு பிரச்சனைகள் வருவதை தடுக்கிறது. மேலும், இதில் உள்ள அழற்சி எதிர்பொருட்கள் உடலை ஆக்சிஜனேற்றத்துடன் வைத்து நோய்களிலிருந்து தள்ளியிருக்க உதவுகிறது.

ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகள் :

* ஹெர்ரிங் மீன்

* சால்மன் மீன்

* ஆலிவ் எண்ணெய்

* ஆளி விதைகள்

* நெத்திலி

* வால்நட்ஸ்

* சியா விதைகள்

* மத்தி மீன்

இந்த மீன் மற்றும் உணவுகள் தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்ளும்போது அது பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்பதுடன் தினசரி உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்கும். எனவே, ஆரோக்கியமான டயட் முறையின் மூலம் கேன்சர் மட்டுமல்லாமல் பிற நோய்களில் இருந்தும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

Read More : சுயநலனுக்காக ஊழல் கூடாரத்தில் இளைப்பாறும் கமல்..!! எம்ஜிஆர் போல நாங்களும் செய்து காட்டுவோம்..!! பதிலடி கொடுத்த தவெக..!!

English Summary

Nutrients in seafood such as fish have been shown to reduce the risk of cancer.

Chella

Next Post

செட் தகுதித் தேர்வுக்கு இவர்களுக்கும் விண்ணப்பிக்கலாம்...! ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு...!

Sun Feb 23 , 2025
They can also apply for the SET eligibility test...! Teacher Selection Board's action announcement

You May Like