கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் கோவில் அமைந்துள்ள குளத்தில் , அன்னபிரசாதம் மட்டுமே உண்டு வாழ்ந்து வந்த முதலை உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகம் அடைந்தனர்.
காசர்கோடு கோவிலில் அனந்த பத்மநாப ஸ்வாமி கோவிலில் உள்ள குளத்தில் 75 வயது மதிக்கத்தக்க முதலை வாழ்ந்து வந்தது. ’பாபியா ’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த முதலை இதுவரை அசைவ உணவுகளே சாப்பிட்டது கிடையாதாம். கோவிலில் வழங்கப்படும் அன்னபிரசாதம் மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தது.
இதனால் முதலைக்கு ’தெய்வீக’ இணைப்பு இருந்ததாகவும், தெய்வத்தை பாதுகாப்பதுதான்அதன் வேலை என அப்பகுதி மக்கள் நம்பினர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிரசாதத்தை அன்போடு வழங்கி வந்தனர். மிகவும் பிரபலான இந்த முதலை இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த முதலைக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். கேரளாவில் உள்ள பாஜ தலைவர்கள் இதை பதிவிட்டு அஞ்சலி செலுத்திவருகின்றனர். ’’ பாபியா விஷ்ணு பாதத்தை அடைந்துவிட்டது. 70 ஆண்டகளாக கோவில் ஏரியில் அன்ன பிரசாதம் உண்டு வாழ்ந்து வந்தது. இதுவரை கோயிலைக் காத்து வந்த முதலை முக்தி அடையட்டும் ஓம்சாந்தி என விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே கூறினார்.