புறநகர் ரயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைத்து இயக்குவது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகரில் உள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் சபர்பன் எனப்படும் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி , சென்னை கடற்கரை முதல் தாம்பரம் , சென்னை கடற்ரை முதல் வேளச்சேரி , சென்னை கடற்கரை முதல் தாம்பரம் , சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு , சென்னை மூர் மார்க்கெட் முதல் கும்மிடிப்பூண்டி வரை , மூர்மார்க்கெட் முதல் திருவள்ளூர் ஆகிய வழித்தடங்களில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினசரி ஏராளமான பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடற்கரை முதல் செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவையை அதிக மக்கள் பயன்படுத்துகின்றார்கள். இதற்கு போட்டியாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எளிய நடுத்தர மக்களின் பிரதான போக்குவரத்திற்காக புறநகர் ரயில் சேவை பயன்படுகின்றது.
இந்நிலையில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைத்து இயக்க சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பதை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.