அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமர் பாலம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

பாலிவுட் நடிகரான அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமர் பாலம்’. இந்த படத்தை அபிஷேக் சர்மா என்பவர் இயக்கியுள்ளார். அக்ஷய்குமாருடன் இந்த படத்தில் ஜாக்லின், நஷ்ரத், சத்யதேவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ராமாயணத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சென்று சீதையை ராமர் மீட்டார் என்பது வரலாறு. அப்போது கடல் வழியாக செல்வதற்கு மிதக்கும் பாலம் ஒன்றை ராமர் கட்டியதாக சொல்லப்படுகிறது. 7 ஆயிரம் வருடத்திற்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பாலம் இன்னமும் இருப்பதாக பேசப்படுகிறது. 


இந்த பாலத்தை கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாக படத்தில் நடித்துள்ளார் அக்ஷய் குமார். இந்த படம் அக்டோபர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ராமர் கட்டிய பாலத்தின் மிதக்கும் கல்லை அக்‌ஷய் எடுத்து வருவது போல காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே கடலில் ராமர் பாலம் இருக்கிறதா.. இல்லையா என நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயம். இதுபோன்ற கதையில் அக்‌ஷய் நடித்துள்ளது எந்த விதமான விமர்சனங்களைப் பெறும் என்பது தெரியவரும்… 

Next Post

சீமான் தான் மனநோயாளி ?… நான் என்ன மன நோயாளியா?.. அப்படியாபேசுகின்றேன் .. கடுப்பான எச்.ராஜா

Tue Oct 11 , 2022
நாம் தமிழர் கட்சி சீமான், எச்.ராஜா ஒரு மன நோயாளி என கூறியதற்கு பதில்கொடுக்கும் விதமாக நான் என்ன மன நோயாளியா? சீமான் தான் மன நோயாளி என பதிலளித்துள்ளார். சென்னையில் திரையரங்கு ஒன்றில் பேசிய அவர் சீமான் பேசியதற்கு பதில் அளித்து பேசினார், மேலும் சீமான் ஒரு தமிழனே கிடையாது . அவர் ஒரு மலையாளி . இந்துவும் இல்லை… கிறிஸ்டியன் என நான் சொல்லவில்லை அவருடன் இருந்த […]

You May Like