சூப்பர் சான்ஸ்..! 1 முதல்‌ 10-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை…! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!

சிறுபான்மையினர்‌ இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்‌ மத்திய அரசால்‌ சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்‌, கிறித்துவர்‌, சீக்கியர்‌, புத்தமதத்தினர்‌, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ மதத்தைச்‌ சார்ந்த அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ மத்திய / மாநில அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 2022-23 கல்வியாண்டில்‌ ஒன்று முதல்‌ 10 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின்‌ https://scholarships.gov.in/ என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் NPS ஆன்லைன்‌ மூலம்‌ விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்‌ 31.10.2022 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


தகுதியான மாணவ, மாணவிகள்‌ பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 15.10.2022 வரையிலும்‌ மேற்படி இணைய தளத்தின்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌. இத்திட்டம்‌ தொடர்பான கூடுதல்‌ விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர்‌ வளாகத்தில்‌ அமைந்துள்ள மாவட்ட பிற்படு த்தப்பட்‌ டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

PM Kissan: ரூ.6,000 நிதி உதவி பெறும்‌ விவசாயிகள்‌ உடனே இதை செய்து முடிக்க வேண்டும்...! இல்லையென்றால் சிக்கல்...

Wed Oct 12 , 2022
சேலம்‌ மாவட்டத்தில்‌ பிரதம மந்திரியின்‌ கிஷான்‌ நிதி உதவி பெறும்‌ விவசாயிகள்‌ ஆதார்‌ எண்ணுடன்‌ செல்போன்‌ எண்ணை இணைக்க அஞ்சலகங்களை அணுகி பயன்பெறலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, தனது செய்தி குறிப்பில் மத்திய அரசின்‌ பிரதம மந்திரி கிசான்‌ சம்மன்‌ நிதி திட்டத்தின்‌ கீழ்‌ நாடு முழுவதும்‌ உள்ள விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ ஆண்டொன்டிற்கு ரூ.6,000, வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும்‌ 3 தவணையாக ரூ.2,000/- வீதம்‌ இந்த […]
pm 1

You May Like