இங்கிலாந்து மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
இங்கிலாந்தை சுமார் 70 ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ம் தேதி காலமானார் இதையடுத்து அவரதுமகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார்.
ஏற்கனவே 3ம் சார்லஸ் அடுத்த மன்னர் என பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் முடிசூட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட உள்ளது. 2023ம் ஆண்டு மே 26 ம் தேதி முடிசூட்டு விழா நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் மன்ன்ர் 3ம் சார்லஸ் மற்றும் ராணி ஆகியோருக்கு முடிசூட்டு விழா நடத்தப்படும்.
74 வயதான மன்னர் சார்லஸ் இங்கிலாந்து வரலாற்றில் மன்னராக முடிசூடப்படும் மிக வயதான நபர் . வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற உள்ள விழாவில் ராணி கமிலா பார்க்கருடன் மன்னர் சார்லஸ் முடிசூடிக்கொள்வார். அதிகாரப்பூர்வ ஆட்சி அதன் பின்னர் தொடங்கும்.