fbpx

’டயானா உயிரோடு இருந்திருந்தால் பெருமைபட்டிருப்பார்’  இளவரசர் ஹேரியிடம் செவிலியர் கூறிய தகவல்…

செவிலியர் ஒருவர் இளவரசர் ஹேரியிடம் , ’’ டயானா உயிரோடு இருந்திருந்தால் பெருமைப்பட்டிருப்பார்’’ என கூறிய நொடியில் கலங்கிப்போனார் ஹேரி..

லண்டனில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. ஹேரியின் தாய் டயானாவைப் போலவே  தொண்டுள்ளம் கொண்டவர் ஹேரி. அவர் அடிக்கடி தொண்டு நிறுவனங்களுக்கு சென்று வருவார். அவர்களுக்கான உதவிகளையும் ஹேரி செய்வது வழக்கம். மேலும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஹேரி மனைவி மேகனுடன் கலந்து கொள்வார்.

இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் ஹேரி பங்கேற்றார். குழந்தைகளுக்கு விருதுகளை வழங்கிய பின் அங்கிருந்த செவிலியர் ஒருவர் ’ உங்கள் அம்மா டயானா உயிரோடு இருந்திருந்தால் மிகவும் பெருமைப்பட்டிருப்பார். கோடிகோடியாக பணம் இருந்து என்ன சாதித்தது. நான் ஒரு அம்மாவாக உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகின்றேன்’’.. என்றார்..

இதைக் கேட்ட உடனே.. ஹேரி மனதளவில் கலங்கிப்போனார். உணர்ச்சிமிக்க வார்த்தைகளை செவிலியர் கூறியது  அதிர்ச்சிகலந்த ஆச்சர்யம் ஏற்பட்டது. எனினும் அமைதியாக தலையசைத்த ஹேரி .. இது மிகவும்இனிமையானது என புன்னைகையுடன் செவிலியருக்கு பதில் அளித்தார்.

Next Post

ஆத்தாடியோவ் ! ரூ.400 கோடி வசூலித்த பொன்னியின் செல்வன்…

Wed Oct 12 , 2022
பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் இதுவரை ரூ.400 கோடி வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.. லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியானது. கல்கி நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்து வசூலில் அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்தது. இந்த நிலையில் படம் வெளியாகி 13 நாட்கள் […]

You May Like