fbpx

தொடர் போராட்டம்..!! தமிழகத்தில் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு..!! உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

ஆவின் பால் உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், வரும் 26ஆம் தேதிக்குள் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகம் முழுவதும் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

தொடர் போராட்டம்..!! தமிழகத்தில் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு..!! உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு..!!

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பால் ரூ.32-லிருந்து ரூ.42 ஆகவும், எருமைப்பால் ஒரு லிட்டர் ரூ.41-லிருந்து ரூ.51 ஆகவும் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பால் நிறுத்த போராட்டம் நடைபெற்றால் நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகும் என்று பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

விடிய விடிய நடந்த பஞ்சாயத்து..!! கதறி அழுத ஜி.பி.முத்து..!! தனலட்சுமிக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் ஆர்மி..!!

Thu Oct 13 , 2022
கடந்த சில நாட்களாக வீட்டை குதூகலத்தில் வைத்திருந்த ஜிபி முத்து, திடீரென கதறி அழுதது, பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் அனைவரையம் கவலை கொள்ளச் செய்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி, தொடக்கத்திலேயே பரபரப்பை எட்டியுள்ளது. அதற்கு காரணம், இந்த முறை சரியான போட்டியாளர்களை உள்ளே அனுப்பியது தான். ஜி.பி.முத்து போன்ற எளிய சாமானியர்களை உள்ளே அனுப்பியதால், அவர்களின் வெகுளித்தனம் வெகுஜனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே […]
விடிய விடிய நடந்த பஞ்சாயத்து..!! கதறி அழுத ஜி.பி.முத்து..!! தனலட்சுமிக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் ஆர்மி..!!

You May Like