fbpx

சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா அறிவித்த குட்நியூஸ்!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற அஜய்கிருஷ்ணா குட் நியூஸ்-ஐ இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் அஜய் கிருஷ்ணா மயக்கும் குரலில் ரசிகர்களை கவர்ந்தார். உதித் கிருஷ்ணாவின் குரல்போல இவரது குரல்வளம் இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். சில மாதங்களுக்கு முன்பு ஜெசி என்பவரை திருமணம் செய்து கொண்ட அஜய் கிருஷ்ணா தற்போது அப்பாவாகிவிட்டார்.

இந்த செய்தியை தனது ஆசை மனைவியுடன் இருக்கும் ஜோடியான புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கின்றார்.

https://www.instagram.com/p/CjpGSzTLxg9/?utm_source=ig_web_copy_link

அஜய்கிருஷ்ணா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து கூறி அவருடைய மனைவியான ஜெஸ்ஸி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், நான் தொலைக்காட்சியில் பார்த்த சிறந்த பாடகருக்கும், சிறந்த காதலனுக்கும், சிறந்த வருங்கால கணவருக்கும், சிறந்த கணவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் எடுத்த முடிவுகளிலேயே மிகச் சிறந்த முடிவு நீங்கள் தான் என்பதை நீங்கள் தொடர்ந்து எனக்கு உணர்த்துவீர்கள். ஒன்றாக சேர்ந்து சிறந்த அம்மா அப்பாவாக இருப்போம். என அவர் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Next Post

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீரென புகை… ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கம் !!

Thu Oct 13 , 2022
ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு ஏற்பட்டதால் திடீரென புகை சூழ்ந்தது இதனால் ஐதராபாத்தில் தயைிறக்கப்பட்டது. கோவாவில் இருந்து 86 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் திடீரென புகை மூட்டம் சூழ்ந்தது. விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் புகை மண்டலமானது. இதையடுத்து விமானத்தின் காக்பிட் இதை கண்டறிந்து சமிக்ஞை அனுப்பியது எனவே ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. எனினும் பயணிகள் பீதியடைந்தனர். அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் […]

You May Like