fbpx

TNPSC-இல் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! மாதம் ரூ.1.13 லட்சம் சம்பளம்..!! விண்ணப்ப பதிவு தொடங்கியது..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், நிரப்பப்படவுள்ள மீன்வளத்துறை சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

TNPSC-இல் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! மாதம் ரூ.1.13 லட்சம் சம்பளம்..!! விண்ணப்ப பதிவு தொடங்கியது..!!

இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் முழு விவரம்…

நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

பணியின் பெயர்: Sub-Inspector of Fisheries 

காலி பணியிடங்கள்: 24

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் 16 முதல் 18ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை: TNPSC யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு ( http://www.tnpsc.gov.in/) சென்று விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். பின்னர் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

தேர்வு நடைபெறும் தேதி: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி

சம்பள விவரம்: இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.35,900 முதல் ரூ1,13,500 வரை வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி: தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி வாரியத்தின் கீழ் மீன்வளத் தொழில்நுட்பத்தில் டிப்ளோ படித்திருக்க வேண்டும். அல்லது மீன்வளம் (அ) உயிரியல் முக்கிய பாடமாக கொண்ட அறிவியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டண விவரம்: விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். அதேபோல், தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இட ஒதுக்கீட்டின் படி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

"ஸ்வாதி முதல் சத்யா வரை" ஒரு தலை காதல் கொலைகள் - கொந்தளித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்!!!

Sat Oct 15 , 2022
மாணவி சத்யாவை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஈசிஆரில் சதீஷை கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மாணவி சத்யா இறந்த செய்தி கேட்டு அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது, இது […]

You May Like