மணிப்பூரில் நான்கு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்கள் இனி அரசின் பென்ஷன் போன்ற சலுகைகளை பெற முடியாது மற்றும் மாநில அரசு வேலைகளுக்குத் தகுதி பெற மாட்டார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் தொடர்பு அமைச்சர் எஸ் ரஞ்சன் நான்கு குழந்தைகளுக்கு மேல் உள்ள எந்தவொரு நபரும் அல்லது குடும்பமும் வேலை தவிர பல்வேறு அரசு திட்டங்களில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்ததாக மணிப்பூரின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் எஸ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மணிப்பூர் மாநில மக்கள் தொகை ஆணையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மணிப்பூரில் மக்கள் தொகை ஆணையத்தை நிறுவுவதற்கு மாநில சட்டமன்றம் முன்பு தனிப்பட்ட உறுப்பினர் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதாக ரஞ்சன் கூறினார்.
மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பை பாதிக்கும் வகையில் வெளியாட்கள் மாநிலத்திற்குள் ஊடுருவியதாகக் கூறப்படும் தீர்மானத்தை பாஜக சட்டமன்ற உறுப்பினர் குமுச்சம் ஜாய்கிசன் முன்மொழிந்தார். அதிகாரப்பூர்வ புள்ளி விவரத்தின் படி, 1971-2001 முதல் மணிப்பூரின் மலை மாவட்டங்களில் 153.3 சதவீத மக்கள்தொகை வளர்ச்சி, 2001-2011 முதல் 250 சதவீதமாக கடுமையாக அதிகரித்துள்ளது.