சென்னை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் சேவை தொடங்க உள்ளது என அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
நாட்டிலேயே அதி வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றது. 160 கி.மீ. வேகத்தில் இயங்கக் கூடிய இந்த ரயில் 52 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தை உடனடியாக அடைந்துவிடுகின்றது.இந்த ரயில் பல்வேறு வசதிகள் உள்ளன. ஏற்கனவே புது டெல்லி-வாரணாசி , டெல்லி – மாதா வைஷ்ணவா தேவி , காந்தி நகர் – மும்பை , மற்றும் அம்ப் அந்தாரா- டெல்லி இடையே என 4 வழித்தடங்களில் இயங்கி வருகின்றது.
சென்னை – பெங்களூரு இடையே 5 வதாக இயக்கப்படுகின்றது. இந்த ரயில் மைசூரு வரை நீட்டிக்கப்படுகின்றது. அடுத்த மாதம் 10ம் தேதி இந்த சேவை தொடங்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 483 கிமீ தூரத்திற்கு இந்த ரயில் பயணிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தினமும் பெங்களூரு-சென்னை சென்று வரலாம். இந்த பயணம் மிக எளிமையானதாகவும் விரைவாகவும் இருப்பதால் சென்னை – பெங்களூரு இடையே இந்த ரயிலுக்கு அதிகபட்ச வரவேற்பு இருக்கும். என எதிர்பார்க்கப்படுகின்றது.