fbpx

தீபாவளி பண்டிகைக்கு 211 சிறப்பு ரயில்…! மத்திய அரசு அறிவிப்பு…!

பண்டிகை காலத்தை முன்னிட்டு 211 சிறப்பு ரயில்களை இயக்குகிறது மத்திய ரயில்வே அமைச்சகம்

தற்போது பண்டிகை காலம் என்பதால், பொதுமக்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை குறைக்கவும் கூடுதலாக இந்த ஆண்டு சத் பூஜை வரை, 211 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. தர்பங்கா, அசம்கர், சகர்சா, பகல்பூர், முசாபர்பூர், ஃபிரோஸ்பூர், பாட்னா, கதிஹார் மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு எளிதான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக கூடுதலாக 32 சிறப்பு சேவைகளை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதில் தெற்கு ரயில்வே 11 வழித்தடங்களில் 56 சிறப்பு ரயில் சேவைகளை இயக்க உள்ளது. ஏற்கனவே மொத்தம் 179 சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இருக்கைகளுக்காக முறைகேடுகளில் ஈடுபடுதல், அதிக கட்டணம் வசூலித்தல் போன்ற செயல்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகளை ஒழுங்குப்படுத்த ரயில்வே பாதுகாப்புப் படை ஊழியர்களின் மேற்பார்வையில் ரயில் நிலையங்களில் கூட்டத்தை சரிசெய்யும் நடவடிக்கைகள் உறுதி செய்யப்படுகின்றன.

Vignesh

Next Post

’அம்மா இட்லி சாப்பிட்டது உண்மையா’..?? அம்பலப்படுத்திய ஆறுமுகசாமி ஆணையம்..!!

Wed Oct 19 , 2022
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உணவு, ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்த விதிமுறைகளுக்கு மீறி இருந்ததால் அவருடைய உடல்நிலை மோசமடைந்திருக்கிறது என ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 613 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில், பல்வேறு முக்கிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில் வெளி உணவு வழங்காமல் மருத்துவமனை உணவு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. […]
’ஜெ. உடலுக்கு எம்பார்மிங் செய்தது மருத்துவரோ நர்ஸோ இல்லை’..!! இவர்கள்தான்..!! ஆறுமுகசாமி பரபரப்பு தகவல்

You May Like