fbpx

’பர்த் டே பார்டி’க்கு சென்ற பெண் கடத்தல்..!! 2 நாட்களாக கூட்டு பலாத்காரம்..!! ரத்த வெள்ளத்தில் கிடந்ததால் பரபரப்பு..!!

’பர்த் டே பார்டி’க்கு சென்ற பெண், 5 பேர் கொண்ட மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த 40 வயது பெண், கடந்த சனிக்கிழமை அன்று பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் சென்றுள்ளார். பிறகு, நிகழ்ச்சி முடிந்து டெல்லி திரும்புவதற்கு இரவு காசியாபாத் பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது, அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். அதன் பிறகு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இரண்டு நாட்களாக அந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக துன்புறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து, காசியாபாத்தின் ஆஷ்ரம் சாலை பகுதியில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டார்.

’பர்த் டே பார்டி’க்கு சென்ற பெண் கடத்தல்..!! 2 நாட்களாக கூட்டு பலாத்காரம்..!! ரத்த வெள்ளத்தில் கிடந்ததால் பரபரப்பு..!!

அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி சொருகப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டெல்லி மகளிர் ஆணைய தலைவி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர். இந்நிலையில், இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அந்த பெண்ணை பலாத்காரம் செய்த குற்றவாளிகள் 4 பேரை கைது செய்தனர். மிஞ்சிய ஒருத்தனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கூட்டு பாலியல் செயலில் ஈடுபட்ட 5 பேருமே அந்த பெண்ணுக்கு பழக்கம் உடையவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட கொடூரர்கள் 5 பேருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என குரல் எழுந்துள்ளது.

Chella

Next Post

அதிர்ச்சி..!!! எல்.கே.ஜி. சிறுமிக்கு பாலியல் தொல்லை..!! ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்..!!

Wed Oct 19 , 2022
பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கார் ஓட்டுநருக்கு பெற்றோர் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நர்சரி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளி முதல்வரின் கார் ஓட்டுநராக ரஜினிகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். ஓட்டுநர் ரஜினி குமார், பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை […]
அதிர்ச்சி..!!! எல்.கே.ஜி. சிறுமிக்கு பாலியல் தொல்லை..!! ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்..!!

You May Like