fbpx

தாமதமான பாலியல் புகார் : சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு ரத்து !!

பள்ளி மாணவரின் தாய் பத்து ஆண்டுகள் கழித்து தாமதமாக புகார் அளித்ததால் சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரிபள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்வேறு புகார்கள் வந்தன. புகார்களின் பேரில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதே போல் 2010ல் மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி மஞ்சுளா என்பவர் விசாரித்தார். அப்போது சிவசங்கர் பாபா தரப்பில்  3 ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டுகுளின் கீழ் பத்து ஆண்டுகள் தாமதமாக தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் புகாரை விசாரிக்க சட்டப்பிரிவில் இடமில்லை என மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

காவல்துறை தரப்பில் சிவசங்கர் பாபாவுக்கு எதிரான ஆதாரங்கள்இருப்பதாகவும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தாமதத்தை காரணமாக எடுக்க வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதத்தை ஏற்க மனுத்தாக்கல் செய்யப்படாத நிலையில் சட்டப்படியான தடை உள்ளதாக கூறி சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் நீதிபதி கூறுகையில் பாலியல் தொல்லை என்பது தீவிரமான குற்றமாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார்அளிக்க தயக்கம் காட்டுகின்றனர். அச்சம் மட்டும் காரணமல்ல , சம்மந்தப்பட்டவர்களின் செல்வாக்கும் ஒரு காரணம் என சுட்டிக் காட்டி உள்ள நீதிபதி , சட்ட விரோத செயல் ஒரு நாள் வெளியில் வரும் போது அந்த நபரால் பாதிக்கப்பட்ட பலர் புகார் அளிக்க முன் வருவது இயல்பு என சுட்டிக் காட்டி இருக்கின்றார். எனவே வழக்கில் தாமதமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என சுட்டிக் காட்டி உள்ளார்.

Next Post

நாலரை வயது குழந்தைக்கு கால் வலி … மருத்துவ சோதனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை !!

Wed Oct 19 , 2022
நாலரை வயது குழந்தை கால்வலியால் துடித்தபோது மருத்துவ சோதனைக்கு அழைத்துச் சென்றதில் அதிர்ச்சியான உண்மை தெரியவந்தது. ஐதராபாத்தில் கடந்த 5 மாதங்களாக தனியார் பள்ளியில் படித்து வந்தவர் 4 அரை வயதான குழந்தை . சில நாட்களாகவே காலில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து குழந்தையிடம் தாய் கேட்டபோது குழந்தை டிரைவராக பணியாற்றிய […]

You May Like