நாலரை வயது குழந்தை கால்வலியால் துடித்தபோது மருத்துவ சோதனைக்கு அழைத்துச் சென்றதில் அதிர்ச்சியான உண்மை தெரியவந்தது.
ஐதராபாத்தில் கடந்த 5 மாதங்களாக தனியார் பள்ளியில் படித்து வந்தவர் 4 அரை வயதான குழந்தை . சில நாட்களாகவே காலில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து குழந்தையிடம் தாய் கேட்டபோது குழந்தை டிரைவராக பணியாற்றிய நபரை பற்றி தெரிவித்துள்ளது.
அந்த நபர் பள்ளியில் தனி அறையில் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இது பள்ளி தலைமை ஆசிரியரின் அலட்சியப் போக்கால் பாதிக்கப்பட்டதாக குழந்தையின் தாய் புகார் அளித்துள்ளார்.
புகாரை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட பள்ளி வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். பள்ளி தலைமை ஆசிரியருக்கு எதிராகவும் புகார் பதியப்பட்டுள்ளது.
குழந்தை பலாத்கார சம்பவத்திற்கு பா.ஜ. தெலுங்கானா மகளிர் அணியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி விரைவில் தண்டனை வழங்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.