குடிபோதையில் தாயைக் கொன்றுவிட்டு வழக்கில் சாட்சி சொல்ல வந்த சகோதரியையும் , தந்தையையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி(47). இவருடைய மகள் கல்லூரிப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் உள்ளார். மகன் மூர்த்தி குடிபோதைக்கு அடிமையாக தினமும் தகராறு செய்து வந்துள்ளான். இவரது கணவர் கூலி வேலை செய்து வந்துள்ளார் . போதைக்கு அடிமையான இவர்வழக்கம் போல குடித்துவிட்டு வந்து சாப்பிட்டுள்ளார். பின்னர் மீண்டும் குடித்து விட்டு வந்து சாப்பாடு கேட்டுள்ளார். சாப்பாடு தீர்ந்துவிட்டதாக லட்சுமி கூறிநிலையில் எனக்கு சமைத்து கொடு என கேட்டுள்ளார்.
நீ குடித்துவிட்டு வருவாய் உனக்கு நான் சாப்பாடு தர வேண்டுமா என தாய் லட்சுமி சண்டையிட்டுள்ளார். வாக்கு வாதம் களவரமாக மாறியது. பின்னர் வீட்டிலிந்த அரிவாள்மனையால் தாயை வெட்டி விட்டு தப்பி சென்றார். இதில் சம்பவ இடத்தில் லட்சுமி உயிரிழந்தார்.
வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர் தேடி பிடித்து சிறையில் அடைத்தனர். இது குறித்து அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. சாட்சிக்காக தந்தை ராமலிங்கம், சகோதரி செல்வி வந்துள்ளனர். அவர்களை சாட்சியளிக்க கூடாது என்று மிரட்டியுள்ளார் மூர்த்தி . எனக்கு எதிராக சாட்சி கூறினால் உங்களையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளனர். இதையடுத்து கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.