மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் வயது 100ஐ நெருங்கினாலும் இவர் இன்னும் இளமையோடு சுறுசுறுப்போடு செயல்பட்டு வருவது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் மூத்த மார்க்சிஸ்ட் தலைவரும் முன்னோடிகளில் ஒருவருமான கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்தான் 100 ஐ நெருங்குகின்றார். எனவே இவரது பேச்சுத்தான் மாநிலம் முழுக்க பேசப்பட்டு வருகின்றது.
முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அவர்களுக்கு வயது 99 நடக்கின்றது. இதன் மூலம் 100 ஐ நெருங்கும் தலைவர் என அனைத்து தரப்பினரும் பேசி வருகின்றனர். கட்சி நடவடிக்கைகளில் இருந்து 3 ஆண்டுகளாக இவர் விலகி இருந்தாலும் சுறுசுறுப்பாகஇன்றும் செயல்படுகின்றார். இவரது பிறந்த நாளை இன்று கட்சியினர் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர் 1994ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாகரன் மீது பாமாயில் இறக்கமதி வழக்கு , முன்னாள் மின்துறை அமைச்சர் பால கிருஷ்ணன் பிள்ளை மீது ஊழல் வழக்கு , 1990ல் ஐஸ்கிரீம் பார்லர் பாலியல் வழக்கு முன்னாள் அமைச்சர் கே.எம்.மணிக்கு எதிரான வழக்கு போன்றவற்றை தைரியமாக தொடுத்தவர்தான் அச்சுதானந்தன். இவர் நேர்மையாக செயல்படும் ஒரு அரசியல்வாதி தன் மனதிற்கு பட்டதை சரியாகவும் நியாயமாகவும் செய்வதில் வி.எஸ். அச்சுதானந்தன் தனித்தன்மை மிக்கவர் . ூத்த இடதுசாரி தலைவராக இருந்த கொரியம்மாவே ஒரு வேளை அச்சதானந்தன் இடத்தில் நான் இருந்திருந்தால் கட்சி என்னை நூறுமுறை வெளியேற்றி இருக்கும் என்று கூட தெரிவித்திருந்தார். ஆளும் கட்சியாக , ஏன் முதல்வராக இருக்கும் போது எதிர்கட்சி போன்று ஜனநாயக வாதியாக செயல்பட்வர் அச்சுதானந்தன். 2004ம் ஆண்டு மலப்புரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் மாநாடு அச்சுதானந்தன் பரிந்துரைத்தவர்களை வீழ்த்தி கவனிக்க வைத்தார் பினராயி விஜயன்.
16 ஆண்டுகளுக்கு முனு்பு கேரளாவின் முதல்வராக இருந்தார் வி.எஸ். அச்சுதானந்தன். அப்போது கட்சியின் மாநில செயலாளராக பினராயி விஜயன் நியமிக்கப்பட்டார். அப்போதே இருவருக்கு இடையே வார்த்தை போர் ஏற்பட்டு தலைமை தலையிடும் சூழல் வ்நதது. 2015ல் தன் வயதை காரணம் காட்டி 2016ல் பினராயி விஜயன் பணியமர்த்தப்பட்டார். அச்சுதானந்த்தின் பிரசாரத்தை தான் கட்சியினர் நம்பி இருந்தனர். இதையடுத்து பினராயி அரசமைத்து இரண்டாவது முறயும் தொடர்கின்றது. அச்சுதானந்தன் அவர்களுக்கு கேரள நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது ஆனால் அதையும் வயோதிகத்தை காரணம் காட்டி அவர் விலகிக் கொண்டு பின்னர் வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றார்.
இயற்கையோடு இணைந்த வாழக்கை வாழ்கின்றேன். ரசாயனக் கலப்பற்ற இயற்கை விளை பொருட்களையே நான் உணவாக எடுத்துக் கொள்கின்றேன். ரசாயனக் கலப்பற்ற இயற்கை விளை பொருட்களையே உணவாக எடுத்துக் கொள்கின்றேன். இது தான் நான் வயது 100 ஐ நெருங்கும் ரகசியம் என்கின்றார். அவர்.