fbpx

’தயவு செய்து வெளியேறி விடுங்கள்’..!! ’கோபத்தில் கதவை திறந்துவிட்ட பிக்பாஸ்’..!! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்..!!

போட்டியாளர்களின் சண்டையால் கடுப்பான பிக்பாஸ், வீட்டின் வாசற்கதவை திறந்து, யாராவது வெளியே செல்ல விருப்பம் இருந்தால் தயவு செய்து வெளியேறி விடுங்கள் என்று கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு முன்னதாகவே, தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கியது. இந்நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார். வழக்கம்போல இந்த வாரம் தலைவரை தேர்ந்தெடுக்கும் கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. வீட்டில் உள்ள போட்டியாளர்களை இரண்டு குழுவினராக பிரித்து, அதில் ஒரே நேரத்தில் ஒவ்வொரு டீமில் இருந்தும் ஒருவரை அழைத்து ஒரு சுவற்றில் போஸ்டர் ஒட்டும் வேலை கொடுக்கப்பட்டது. இந்த போட்டியில் பெரும்பாலும் அனைத்து போட்டியாளர்களும் சுவாரஸ்யம் குறைவாகவே நடந்து கொண்டனர்.

’தயவு செய்து வெளியேறி விடுங்கள்’..!! ’கோபத்தில் கதவை திறந்துவிட்ட பிக்பாஸ்’..!! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்..!!

அநாகரிகமாக சண்டையும் போட்டனர். ஒரு கட்டத்தில் இவர்கள் செயலால் கடுப்பான பிக்பாஸ், போட்டியாளர்களை அழைத்து உங்களில் யாருக்காவது இந்த பிக்பாஸ் போட்டியில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்றால் அவர்கள் தயவு செய்து வெளியேறி விடுங்கள் என்று கூறியதுடன் வாசற்கதவையும் திறந்து விட்டார். பிக்பாஸின் இந்த செயலால் அதிர்ச்சியான போட்டியாளர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். இருந்தாலும் கோபம் குறையாத பிக்பாஸ் இந்த வார கேப்டன்சி டாஸ்க்கை கேன்சல் செய்தார். அந்த வகையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் புதிய தலைவர் என யாரும் தேர்ந்தெடுக்கப்படாமலேயே நிகழ்ச்சி தொடர்கிறது.

Chella

Next Post

பிட் பேப்பரை ’லவ் லெட்டர்’ என நினைத்து சிறுவன் அடித்துக் கொலை..!! மாணவியின் அண்ணன் வெறிச்செயல்..!!

Fri Oct 21 , 2022
பிட் பேப்பரை லவ் லெட்டர் என நினைத்து சிறுவனை மாணவியின் அண்ணன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் போஜ்பூரைச் சேர்ந்தவர் தயா குமார் (12). இவர் அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை […]

You May Like