ரஷ்யாவின் போர் விமானம் ஒன்று சிபெரியா நாட்டில் விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிபெரியா நாட்டில் ரஷ்ய நாட்டின் போர் விமானம் விழுந்தது. குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. கீழே விழந்த அடுத்த நொடியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது இதனால் பெரும் பபரபரப்பு ஏற்பட்டது.
சிபெரியாவில் இக்குட்ஸ்க் என்ற பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு குடியிருப்பு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.இந்த விபத்தில் விமானத்தில் இருந்து குழு உறுப்பினர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குடியிருப்பு கட்டிடம் இந்த விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலையில் இதுவரை உயிரிழப்புகள் ஏற்பட்டதா , யார் தப்பித்தார்கள் , பிழைத்தார்கள் என்ற தகவல் கிடைக்கப்படவில்லை.
கடந்த வாரம் ரஷ்யாவில் ஜெட்விமானம் ஒன்று இதே போல கீழே விழுந்து நொறுங்கியது. அதில் 15 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நடந்து சுமார் ஒருவாரத்திற்குள்ளாகவே மற்றொரு சம்பவம் சிபெரியாவில் நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.