விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பகல் நிலவு’ சீரியலின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் அசீம். அந்த சீரியலில் நடிகை ஷிவானியுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அதன்பிறகு இருவரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற தொடரில் மீண்டும் நடிக்க சில எபிசோடுகளுக்குப் பிறகு அந்த சீரியல் நிறுத்தப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து வந்த அசீம், தற்போது தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அதில், கதை சொல்லும் டாஸ்கில் தனது மனைவி மற்றும் குழந்தை பற்றி பேசினார். அதாவது என் மனைவியும் நான் சினிமாவில் இருக்கிறேன் என்று தெரிந்து தான் திருமணம் செய்தார். திடீரென கருத்து வேறுபாடு எனக் கூறும் போதே மற்ற போட்டியாளர்கள் கதையை நிராகரித்துவிட்டனர். இந்நிலையில் இவரின் மனைவி பற்றி இணையதளவாசிகள் சில விடயங்களை பகிர்ந்து வருகிறார்கள். அதாவது, கடந்த வருடம் அசீம் ஒரு பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில், அனைவருக்கும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நானும், என் மனைவியும்(Syed Zoya) பாரஸ்பரமாக விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டோம். அதே சமயம் இது குறித்து தனிப்பட்ட கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இருக்கையில் இவரும் இவரது மனைவியும் பிரிந்து வாழும் நிலையில், இவரது மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.