fbpx

பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ – என்ட்ரி கொடுக்கும் உடன்குடி நாயகன்..!! ரசிகர்கள் உற்சாகம்..!!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து, மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா, தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பிக்பாஸில் பொதுவாக 40 நாட்களை கடந்து வரும் சண்டைகள் அனைத்தும் இந்த சீசனின் முதல் இரண்டு நாட்களிலேயே தொடங்கிவிட்டது. கடந்த வாரத்தில் அது வெடித்து சிதறியது.

பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ - என்ட்ரி கொடுக்கும் உடன்குடி நாயகன்..!! ரசிகர்கள் உற்சாகம்..!!

இந்நிலையில், பிரபல யூடியூபராக இருக்கும் ஜிபி முத்துவுக்கு பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயும் சரி வெளியவும் சரி ஆதரவு அதிகமாகவே இருந்தது. கடந்த சீசனிலேயே தன்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்ததாகவும் அப்போது ரசிகர்கள் வேண்டாம் என்று சொன்னதாலயே போகவில்லை என்றும் முன்னதாக ஜிபி முத்து தெரிவித்திருந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலான ரசிகர்கள் ஜிபி முத்துவின் நடவடிக்கையை அதிகம் ரசித்தனர். ஜிபி முத்து கடந்த வாரத்தில் தனக்கு குழந்தைகள் மீது நினைவாக இருக்கிறது என சொல்லி தன்னை வெளியில் அனுப்பிவிடும்படி கூறினார். அவரை சமாதானம் செய்ய பிக்பாஸ் முயற்சித்தாலும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ - என்ட்ரி கொடுக்கும் உடன்குடி நாயகன்..!! ரசிகர்கள் உற்சாகம்..!!

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கமல்ஹாசன் வந்த எபிசோடில் ஜிபி முத்து உடன் தனியாக பேசினார். அப்போது கமல் ஜிபி முத்துவிற்கு சமாதானம் கூறியும் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து ஜிபி முத்துவின் உணர்வுக்கு மதிப்பளித்து வெளியில் அனுப்புவதாக கமல் கூறி அவரை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி வைத்தார். இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்து இல்லை என்றால் சுவாரஸ்யமாக இருக்காது என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து பேசிவரும் திரையுலக பிரபலங்களும் ஜிபி முத்து மீண்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்றே தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

மீண்டும் பயங்கரம்...! ரஷ்யா நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு...!

Tue Oct 25 , 2022
உக்ரைனின் செர்னிஹிவ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர் ரஷ்ய ராணுவம் உக்ரைனின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்றான Kherson ஐக் கைப்பற்றியதாக உக்ரேனிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதைத் தவிர, உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக இரண்டு உக்ரேனிய துறைமுகங்களைக் கைப்பற்றியது மட்டுமின்றி நாட்டின் இரண்டாவது பெரிய நகரத்தின் மீது குண்டுவீச்சுக்கு அழுத்தம் கொடுத்தது. அதே நேரத்தில் கெய்வ் அச்சுறுத்தும் […]

You May Like