சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய வாட்ஸ் அப் செயலி தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியது.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றத்தில் மக்கள் மத்தியில் வாட்ஸ்அப் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்புவதற்கு வாட்ஸ் அப் செயலி பெரும் உதவியாக உள்ளது. அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு சாதனமாக வாட்ஸ் அப் விளங்குகின்றது.
இந்நிலையில், இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாட்ஸ் அப் செயலி முடங்கியது. முன்னறிவிப்பின்றி முடங்கியதால், குறுந்தகவல்களை அனுப்பவும் முடியாமல், பெறவும் முடியாமல் போனது. இதனால், பயனர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக முடங்கி இருந்த வாட்ஸ் அப் செயலி தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியது. இப்போதுதான் பயனர்கள் நிம்மதியாக இருக்கின்றனர்.