Flipcart- ல் லேப்டாப் ஆர்டர்.. ஆனால், வந்ததோ..? கஸ்டமருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

கர்நாடக மாநிலத்தின் மங்களூர் பகுதியில் பிளிப்கார்டில் லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்தவருக்கு, பார்சலில் கற்கள் வந்ததால் அதிர்ச்சியடைந்த சம்பவம் நடந்துள்ளது.

மங்களூருவை சேர்ந்த சின்மய ரமணா என்பவர், தீபாவளி பண்டிகையையொட்டி , தன்னுடைய நண்பருக்காக பிளிப்கார்ட் நிறுவனத்தில் லேப் டாப் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார்.

மேலும், சில தினங்களில் அவருக்கு அதுபற்றிய பார்சல் ஒன்றும் வந்துள்ளது. வந்த பார்சலில், லேப் டாப்பிற்கு பதிலாக சிறிய கல் துண்டுகளும்,இ-வேஸ்டுகளும் இருந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சின்மய ரமணா, இந்த சம்பவம் குறித்து புகைப்பட ஆதாரத்துடன் ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு, இ-மெயில் மூலமாகவும் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்திலும் இதுபற்றி பதிவிட்டார்.

அவரின் புகாரை ஏற்றுக் கொண்டு, லேப்டாப்பிற்காக செலுத்திய முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும் என, பிளிப்கார்ட் நிறுவனம் உறுதியாக தெரிவித்துள்ளது.

Rupa

Next Post

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை..!! போக்குவரத்து விதிகளை மீறினால் கூடுதல் அபராதம்..!! இன்று முதல் அமல்..!!

Wed Oct 26 , 2022
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கூடுதல் அபராதத் தொகை வசூலிக்கும் சட்டத்திருத்தம், நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. கடந்த 20-ம் தேதி திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில், வரும் 28ஆம் தேதியில் இருந்து புதிய அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தேசிய தகவல் மையத்தில் புதிய அபராத தொகை குறித்து வெளியிடப்பட்டதை அடுத்து இன்று முதலே புதிய அபாரத தொகை வசூலிக்கும் முறை […]

You May Like