fbpx

முதுகலை படித்துமுடித்தால் வருடத்திற்கு இவ்வளவு உதவித்தொகையா?

முதுகலைப்படிப்பு முடித்த மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து ஆண்டுக்கு ரூ.20000 பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி, எச்எப்எல் வித்யாதன் என்ற திட்டத்தின் கீழ் உதவித்தொகையை இந்திய முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 வீதம் அளிக்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான மாணவர்கள் பயனடையலாம்.
நாடு முழுவதும் மத்திய , மாநில அரசுகள் தவிர்த்து பல முக்கிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களும் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. வறுமை நிலை காரணமாக கல்வியை சில மாணவர்களால் தொடமுடியாது. எனவே இது போன்ற திட்டங்களின் மூலம் எதிர்காலத்தை உறுதி செய்யப்படுகின்றது. இந்நிலையில் எல்.ஐ.சி. எச்.எப்.எல். வித்யாதன் கல்வி உதவித்தொகை 2022 திட்டம் கல்வியில் சிறந்து விளங்கும் ஆனுால் வசதி இல்லாத மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.
வித்யாதன் திட்டத்தில் முதுகலை பட்டதாரி மாணவர்கள் வருடத்திற்கு ரூ.20,000 வீதம் 2 ஆண்டுகளுக்கு மாணவர்கள் இந்த தொகையை பெற முடியும். இதற்கு மாணவர்கள் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் 2022 -23 கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பின் முதல் ஆண்டில் சேர்ந்த மாணவராக இருக்க வேண்டும். மேலும் , இளநிலை படிப்பில் மாணவர்கள் குறைந்த பட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். குடும்பத்தின் வருமானம் ஆண்டுக்கு ரூ.3,60,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித் தொகையை பெற மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். https://www.buddy4study.com/page/lic-hfl-vidhyadhan-scholarship என்ற இணையதளத்தில் அக்டோபர் 31க்குள் விண்ணப்பித்து தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

  • எப்படி விண்ணப்பிக்க வேண்டும் : முதலில் https://www.buddy4study.com/page/lic-hfl-vidhyadhan-scholarship என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவ பகுதிக்கு செல்ல வேண்டும்.
  • Buddy4Study இல் சென்று ‘Application Form Page’ க்கு செல்ல வேண்டும்.
  • நீங்கள் Buddy4Study இல் பதிவு செய்யவில்லை என்றால் – Buddy4Study இல் உங்கள் மின்னஞ்சல்/மொபைல்/ஜிமெயிலை வைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது,Start Application button to begin the application procedure என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில், கேட்கப்பட்டுள்ள தேவையான விவரங்களை நிரப்பி, தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்

Next Post

’மொசாம்பி ஜூஸ் கிடையாது’ ’மோசமாக பாதுகாக்கப்பட்ட பிளேட்லெட்’ அரசு விளக்கம் ....

Wed Oct 26 , 2022
ரத்த வங்கியில் பிளேட்லெட்டுக்கு பதிலாக மொசாம்பி ஜூஸ் கொடுத்ததால் டெங்கு நோயாளி பலியானதாக கூறப்பட்ட நிலையில் அது மொசாம்பி ஜூஸ் கிடையாது என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் டெங்கு நோயாளியான பிரக்யராஜ் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு ரத்த பிளேட்லெட் வழங்க வேண்டும் என வாங்கி வருமாறு அறிவுறுத்தியது. இதன் பேரில் ஒரு ரத்த வங்கிக்கு […]

You May Like