fbpx

முக்கிய அறிவிப்பு..!! மேலும் 2 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மருதுபாண்டியர் குருபூஜை விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்.30ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மருது சகோதரர்களின் 221-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ஏராளமான கட்சித் தலைவர்கள், அமைப்புகள் அவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்த உள்ளனர். அதுமட்டுமல்லாமல் மருது சகோதரர்கள் நினைவு நாளையொட்டி, சிவகங்கை மாவட்ட மக்கள் ஏராளமானோர் மரியாதை செலுத்துவது வழக்கம். இதனால், இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய பகுதிகள் தவிர்த்து 6 தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார் கோவில், திருப்புவனம் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு..!! மேலும் 2 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

அதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழாவுக்கான ஏற்பாடுகள் பசும்பொன்னில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதன்படி, வரும் 30ஆம் தேதி தேவரின் 115ஆவது ஜெயந்தி விழா, 60வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. முன்னதாக, அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ஆம் தேதி குருபூஜை விழாவும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தேவர் குருபூஜையை முன்னிட்டு அக்.30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு..!! மேலும் 2 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

Chella

Next Post

டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

Thu Oct 27 , 2022
முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நாளில், ஆண்டுதோறும் அரசு சார்பில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம். இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் […]

You May Like