fbpx

தனியார் ஓட்டலில் சாப்பாட்டில் பூரான் … அலறிய வாடிக்கையாளர்…

சென்னையில் ஒரு பிரபல ஓட்டலில் விநியோகிக்கப்பட்ட உணவில் செத்துக்கிடந்த பூரானை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மதுரவாயல் அருகே வானகரத்தில் பிரபல ஓட்டல் இயங்கி வருகின்றது. இந்த ஓட்டலுக்கு கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு ஒரு குடும்பத்தினர் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் பூரான் இருந்தது கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தனர். இறந்த நிலையில் கிடந்த பூரான் பற்றி ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்த போது அதை கண்டும் காணாமல் விட்டுவிட்டனர்.

மேலாளிரடம் முறையிட்டபோது சரியான பதில் தராதது மட்டுமின்றி சாப்பிட்ட சாப்பாட்டுக்கு பணத்தையும் வசூலித்துள்ளனர். இனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக ஓட்டல்களில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக புகார்கள் வரும் நிலையில் தற்போது நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது.

Next Post

’ஊர்ல இருக்கும் நாயி , பேயி சொல்றதுக்குலாம் பதில் சொல்ல முடியாது’ கடுப்பான அண்ணாமலை…

Thu Oct 27 , 2022
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் ’ஊரில் இருக்கும் நாயி , பேயி ’ சொல்றதுக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என கடுப்பாக பேசியுள்ள வீடியோ  வைரலாகி வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் பா.ஜ.க தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ஜ. தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார். பின்னர் அவரிடம் செய்தியாளர்களிடம் கேள்வி கேட்க மைக்கை நீட்டியபோது அவர் கடுப்பானார். என்ன மரத்து மேல குரங்கு […]

You May Like