சமந்தா நடித்து அடுத்து வெளிவரவுள்ள ’யசோதா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ’வாடகைத் தாய் ’ முறையை கதையாக கொண்டது எனதெரியவந்துள்ளது.
சமந்தா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் ’யசோதா’ திரைப்படம் உருவாகி உள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 11ம் தேதி வெளிவருகின்றது. தமிழ் , தெலுங்கு , மலையாளம் உள்பட 5 மொழிகளில் திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கான ட்ரெய்லர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணி தாய்மார்களை பற்றி சமந்தா பேசத் தொடங்குகின்றார். கதை நீள்கின்றது . இந்த ட்ரெயிலரில் சமந்தா சண்டைக்காட்சியில் தெறிக்கவிடுகின்றார்.
வாடகைத் தாய் முறையில் நடைபெறும் மோசடிதான் ’யசோதா’ . ஏற்கனவே தனது நடிப்பாலும் நடனத்தாலும் மக்களை பெரிதும் கவர்ந்துள்ள சமந்தா தற்போது அதிரடியான ஒரு திரைக்கதையில் மாஸ் காட்ட உள்ளார். முன்னணி நடிகையான சமந்தா நடித்து வெளிவர உள்ள யசோதா திரைப்படம் பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக மணி சர்மா, ஒளிப்பதிவாளராக சுகுமார் மற்றும் எடிட்டராக மார்த்தாண்ட வெங்கடேஷ் ஆகியோர் உள்ளனர். ஸ்ரீதேவி மூவிஸ் பேனரில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இப்படத்தை தயாரித்துள்ளார்