தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் புதிதாக XBB என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக GISAID என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தொடர்ந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட, அது உருமாற்றம் அடைந்து மக்களை பயமுறுத்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் புதிதாக XBB என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக GISAID என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. வைரஸின் மாற்றங்களைக் கண்காணித்து வரும் அந்த அமைப்பு, தமிழகத்தில் 175 பேரும், மேற்கு வங்கத்தில் 103 பேரும் என நாடு முழுவதும் 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஒடிசா, மகாராஷ்டிரா, டெல்லி, புதுச்சேரி, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இவ்வகை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. XBB வகை கொரோனா மாறுபாடு முதன் முதலில் சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரை இந்த வைரஸ் 17 நாடுகளில் பரவியுள்ளது.