’பாரதிகண்ணம்மா’ சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகரின் மனைவி திடீர் மரணம் அடைந்ததால் சின்னத்திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
பிரபல நடிகரான பரத்கல்யாண் ’பாரதி கண்ணம்மா ’ சீரியலில் நடித்து வருகின்றார். இவரது மனைவி பிரியதர்ஷினி இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். பேலியோ டயட் முறையை பின்பற்றியதால் சர்க்கரை நோய் ஏற்பட்டதாகவும் இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு 3 மாதம் கோமாவில் இருந்தார் எனவும் கூறப்படுகின்றது.
பரத் கல்யாண் யாக்கா, சிருங்காரம் , பாட்டாளி , பார்த்த ஞாபகம் , சுல்லான் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கின்றார். சமீபத்தில் பாரதிகண்ணம்மாவில் பாரதியின் அம்மாவின் நண்பராக அறிமுகமாகி பின்னர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக நடித்து வருகின்றார். விஜய் டிவி, சன்டிவி போன்ற தொலைக்ாட்சிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி கலர்ஸ் தமிழிர் வெளியாகும் ஜமீலா தொடர்கதையில் ஜமீலாவின் அப்பாவாக நடித்து வருகின்றார்.
இதனால் சோகத்தில் மூழ்கியுள்ள சின்னத்திரை நடிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இரங்கல் செய்திகளை பதிவிட்டு தங்களின் ஆழ்ந்த வருத்தத்தை சமூக வலைத்தலங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறைவான வயதில் பிரியா தங்கை இந்த உலகத்தை விட்டு சென்றுவிட்டார் என்று சின்னத்திரை நடிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
பரத்கல்யாண்-பிரியா தம்பதியினருக்கு ஒரு ஆண்குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தாயை இழந்த குழந்தைகள் சொல்லொண்ணாத்துயரில் ஆழ்ந்துள்ளனர். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.