அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சென்னையில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்பட தொண்டர்கள் கைது செய்யப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
சென்னையில் பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். பா.ஜ.க. மகளிர் நிவாகிகள் குஷ்பூ, கௌதமி ஆகியோர் குறித்து திமுக நிர்வாகி சாதிக் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகின்றது. இதனால் சாதிக்கை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க. அண்ணாமலை உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய அவர்,’’ திமுக மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. சாதிக் என்பவர் 4 பெண் நிர்வாகிகளை தவறாக பேசிவிட்டு சுதந்திரமாக திரிகின்றனர். மகளிர் உங்களுக்கு எதிராக கொட்டும் மழையை பொருட்படுத்தாது மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை நண்பர்கள் எங்களிடம் காட்டும் வீரத்தை சாதிக்கை கைது செய்து அவரை சிறைக்கு அனுப்புங்கள். என்றார்.
’’எதற்காக பெண்களுக்க எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. எதற்காக பெண்ணை ரயில் முன் தள்ளிவிடுகின்றனர்? சாலையில் நிற்கும் பெண்ணிடம் செயின் பறிக்கின்றான். கொலை செய்கின்றான். நிர்பயா போல் பலாத்கார சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறுகின்றது. கட்சியில் இருப்பவர்களே சரியில்லை. நடவடிக்கை எடுக்காமல் ஆட்சி நடத்தினால் சாலையில் நடக்கும் பெண்களுக்கு சமூகம் ஆபத்தாக இருக்கும். தமிழகம் பாதுகாப்பாக இருக்காது. ’’ என அண்ணாமலை பேசினார். ,