fbpx

மோர்பி பாலம் விபத்தில் குழந்தைகள் மட்டும் 55 பேர் பலி… அதிர்ச்சி தகவல்!!

குஜராத் மோர்பி பாலம் விபத்திற்குள்ளானதில் இறந்தவர்களில் குழந்தகள் மட்டும் 55 பேர் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அறுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இறந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை மருத்துவமனை வெளியிட்டுள்ளது. விபத்தில் சிக்கிய 500 பேரில் 135 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள. இதில் 55 பேர் குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பலியானவர்கள் பற்றி மாவட்ட நிர்வாகம் இறுதிப் பட்டியல் வெளியிட்டுள்ளது. மோர்பியில் பாலம் இடிந்த விபத்தில் 39 சிறுவர்கள் , 26 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். 66 பேர் மோர்பி பகுதியை சேர்ந்தவர்கள். 44 பேர் மோர்பி நகர்புற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மோர்பியில் மட்டும் 100பேர் பலியாகி உள்ளனர். ராஜ்காட் மாவட்டம்13பேர் , ஜாம்நகர் 10 பேர் , தேவபூமி துவாரகா பகுதியில் 2 பேர், 2 பேர் அகமதாபாத்தை சேர்ந்தவர்கள் இவ்விபத்தில் பலியான 16 வயது சிறுவன் மேற்கு வங்கம் கொல்கத்தாவை சேர்ந்தவன்.

இந்த விபத்தில் இறந்தவர்களில் 45 பேர் ஆண்கள், 35 பேர் பெண்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.  150 வருட பழைமையான, புதுப்பிக்கப்பட்ட மோர்பி கேபிள் பாலம் அறுந்து விபத்துக்குள்ளானதில், 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக, முறையான தரம் சரிபார்ப்பு இல்லாமல் அவசர அவசரமாகப் பாலம் திறக்கப்பட்டது எனக் குற்றச்சாட்டுகள் எழ, பாலத்தைப் புதுப்பித்த `ஓரேவா’ நிறுவனத்தின் முக்கிய நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது, பாலத்தைப் புதுப்பிக்க ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் ஆறு சதவிகிதத்தை மட்டுமே ஓரேவா நிறுவனம் செலவழித்திருக்கிறது எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Next Post

பள்ளி மாணவர்களுக்கான நியூஸ்: இனி சனிக்கிழமைகளில் பள்ளி இயங்கும்…

Sat Nov 5 , 2022
மழையால் அதிக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அதை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை முதல் மழை பெய்து வருவதால் அன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சில மாவட்டங்களில் மழை பெய்யும் நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய பள்ளிகள் சனிக்கிழமைகளில் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். மழை பெய்யும் நாட்களில் மாணவர்களின் […]
ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணி..!! அதிரடியாக இடமாற்றம் செய்யப்படும் ஊழியர்கள்..!!

You May Like